தை அம்மாவாசை.! இன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் சசிகலா.! முதல் டார்கெட் எம்.கே.எஸ்.! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலா, 'தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், திமுகவை அழிப்பதே முதல் பணி என்றும்  தெரிவித்தார். 

சசிகலாவிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆதரவாக இருப்பதாகவும், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் சசிகலாவுக்கு ஆதரவான மனப்பான்மையில் இருப்பதாகவும் இதன் காரணமாக சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து, அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று சசிகலா ஆலோசனை நடத்த உள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா 234 தொகுதிகளிலும் அமமுக தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உண்டா என்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் தேர்தலில் அதிமுக - அமமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதா என்றும், அமமுக தனித்து போட்டியிட்டால் அது திமுகவின் வெற்றிக்கு வாய்ப்பாகுமா என்றும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala meet ammk member


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->