சசிகலா ஏன் சிறையில் இருந்து வரவில்லை.. பகையை மறக்காத தினகரன்.. ஷாக்கில் அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளார். சசிகலாவின் தண்டனை காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கு முன்கூட்டியே அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நேற்று நடைபெற்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திருமணத்திற்கு சசிகலா பங்கேற்க பரோலில் வருவார் என கூறப்பட்டது. ஆனால் மு.க. ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என திவாகரன் கூறியதை சுட்டிக்காட்டி சசிகலாவை டிடிவி தினகரன் தடுத்து விட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

சசிகலா வரமாட்டார் என்பதை திவாகரனுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அதே போல அரசியல் பகைகளை கடந்து தினகரன், இளவரசி குடும்பத்தினர் திவாகரன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல நாட்களுக்கு முன்பே தினகரன் தனது உறவினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கல்யாணத்திற்கு யாரும் போகக் கூடாது என கூறிவிட்டாராம்.

திவாகரன் மகன் திருமணத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டுள்ளனர். அதிமுக அமமுகவினர் புறக்கணித்த கல்யாணப் பந்தலில், திமுகவின் உடன்பிறப்புகள் அதிகம் காணப்பட்டனர். மன்னார்குடி, ஒரத்தநாடு திமுக எம்எல்ஏகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala family issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->