தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியேறிய நிலையில்., இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தற்க்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளன!!  - Seithipunal
Seithipunal


அமமுகவின் முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசைக்கி சுப்பய்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், 

பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அமமுகவில் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சசிகலாவிடம் தினகரன் விவாதித்தாக தெரிகிறது.

அமமுக-வை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது   தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் பொதுசெயலாளர் தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் தினகரன் உள்ளார்.  இதற்கு முன் நியமித்தா முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன், முன்னாள் எம்.பி, எம்.ல்.ஏ உள்ளிட்ட பலர் தினகரனை விட்டு வேறு கட்சி சென்ற நிலையில் அடுத்து நியமிக்கும் நிர்வாகிகள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என தினகரன் விரும்புகிறார் இதற்க்காக தான் அவர் சசிகலாவை சந்தித்து யார் யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தித்த தினகரன், அமமுகவிலிருந்து பதர்கள் தான் வெளியே சென்றிருக்கின்றன. விதைகள் இன்னும் இங்கேயேதான் இருக்கின்றன குறிப்பிட்ட அவர் ஊடகங்களில் தினகரனின் இடது கை, வலது கை மற்றும் தளபதிகள் பிரிந்து சென்று விட்டதாக செய்திகள் வெளிவருவதை நான் பார்த்தேன் எனக்கு இடது கை, வலது கை மற்றும் தளபதிகள் எல்லாம் என தொண்டர்கள் தான் மற்ற யாரும் இல்லை என தெரிவித்தார் 

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala dinakaran next plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->