அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா.! வழக்கை கையில் எடுத்தார் சசிகலா.! நாள் குறித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து தற்போது தமிழகம் வந்துள்ளார். சிறைக்கு செல்லும் முன்னதாக அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

இதில் பொதுச் செயலாளர் பதவியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாக வழங்கி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட விதிகளும் நிறுத்தப்பட்டன. 

அதிமுகவின் இந்த பொதுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சசிகலா தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, தற்போதைய நிலையே அதிமுகவில் நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட படாமல் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கோரி சசிகலா தரப்பு நடவடிக்கையை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SASIKALA ADMK CASE FILE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->