மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!! மோடிக்கு குவியும் பாராட்டுக்கள்!! - Seithipunal
Seithipunal


கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெற்றது.

இன்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆனால், தமிழகத்தில் பாஜகவுக்குப் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக பாஜக சார்பாக அளிக்கப்பட்ட விருந்தில் சரத்குமார் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.ஆனால், தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. பாஜக ஆட்சியமைப்பதற்கு, நடிகர் சரத்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், " “வாழ்த்துகள் மோடி ஜி. இந்தியாவை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற நீங்கள் செய்துள்ள முன்னெடுப்புகளும் யோசனைகளும், தேசம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது என்பதை அமோகமான இந்த முடிவுகள் காட்டுகின்றன. ‘மேக் இன் இந்தியா’, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்காக ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’. இது புதுமை, சுய நம்பிக்கை மற்றும் சம வாய்ப்புக்கு வழிவகுக்கும். இவை விரைவில் சாத்தியமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து நிற்போம்” என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar wishes to pm modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->