ஆகா., ஜெய்பீம் சரத்குமாரா இது., சாதி பாசம் பொங்க., பொங்க., கண்டன அறிக்கை.! வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் பிரச்னையில் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த சரத்குமார், "நீதி தோற்றுவிடக்கூடாது என்று போராடிய சந்துருவை போலவும், பெருமாள்சாமியை போலவும், நாட்டில் பலர் தோன்ற வேண்டும். நீதி அனைவருக்கும் பொது, இதில் ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழி, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ., அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு" என்று வீர ஆவேசமாக அறிக்கை விட்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று கிறிஸ்துவ மதக்கூட்டத்தில் நாடார் சமூகத்தை (சாதியை) இழிவுபடுத்தி விட்டார்கள் என்று அதே சரத்குமார் கண்டன அறிக்கை விட்டுள்ளார். 

நடிகர் சரத்குமாருக்கு இப்போது "ஜாதி, மத, மொழி, பேதங்கள் இல்லாத, உண்மையான சுதந்திர நாடு" வீர வசனம் மறந்து, சாதி சங்க தலைவர் போல் அறிக்கை விட்டு இருப்பதை, நெட்டிசன்கள் கேள்விகளால் வறுத்து எடுத்து வருகின்றனர்.

சரத்குமாரின் அந்த அறிக்கை பின்வருமாறு, "காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயத்தில், கடந்த 21.11.2021 அன்று நடைபெற்ற மத போதனை திருமதி.பியூலா செல்வராணி என்பவர் இழிவுபடுத்தி பேசியிருப்பது தவறு, எந்தவொரு சமூகத்தையும், சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது. 

மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல. நவீன காலத்தில், பேசுவதற்கு முன்பாக, ஆழமாக சிந்தித்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். 

எந்தவொரு விதத்திலும், உதாரணத்திற்காக கூட மதம், இனம், மொழி சார்ந்து கருத்தை பதிவு செய்து, பிறர் பிறர் மனதை புண்படுத்துவது தவறு. 

பேசுவதற்கு முன்பாக சிந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், மோதல்களையும், சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்த்திட சம்பந்தப்பட்ட அமைப்பினர் அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்" என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SARATHKUMAR WARN FOR NADAR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->