நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகா போட்டி? சரத்குமார் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மற்றும் அந்தக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் வந்தனர். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில், சரத்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியவை, 

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் ராதிகா போட்டியிடுவது குறித்து உயர்மட்ட குழு முடிவு செய்யும். கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் நிற்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. யார், எங்கு வேண்டுமானாலும் நிற்கும் உரிமை உள்ளது. கருத்துக் கணிப்பு பற்றி தற்போது கூறுவது, முன்கூட்டியே கூறுவது போல் இருக்கும். டிஜிட்டல் மீடியாவில் அதிகமாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. மக்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. 

கூட்டணி குறித்து உயர்மட்டடக் குழுவில் கலந்து ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். தூத்துக்குடியில் நான் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டியது நான்தான். வெளியான செய்திகளுக்கு நான் பதில் கூற முடியாது என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar press meet in lok sabha election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->