சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதியில் போட்டியிட போகிறது! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சரத்குமார்!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்  அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்ஆர் காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டடு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. என் ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று இக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar press meet in 2019 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->