#BREAKING விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகர்களில் ஒருவர் வருமான விஜயகாந்த் அவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் நேரடியாக அவரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், வரும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேமுதிகவுடன் அதிமுக பாஜக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இந்த நிலையில் எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்ததோடு, தாங்கள் அரசியல் பேசியதாகவும் செய்தியாளருக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதற்கு பின் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களும், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தார். அப்போது அவரிடம் தேமுதிகவுடன் கூட்டணி அமையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு க ஸ்டாலின், ''உங்கள் நல்ல எண்ணத்திற்கு என் பாராட்டுகள்'' என்று தெரிவித்து விடை பெற்றார்.

ஆனால், திமுகவுடன் தேமுதிக கூட்டணி இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், முன்னணி நடிகருமான சரத்குமார் விஜயகாந்த் அவர்களை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு உடல் நலம் விசாரிக்கவா அல்லது அரசியல் நோக்கத்துடனா என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலயில், விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார் அவர்கள், ''தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன் என்றும், அவருடன் அரசியல் குறித்தும் பேசினேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SARATHKUMAR PRESS MEET AFTER VIJAYAKANTH MEET


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->