பிரச்சாரத்தில் சரத்குமார் கூறிய நாட்டாமை தீர்ப்பு.! ஆடிப்போன எதிர்க்கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது எடுத்து அடுத்த மாதம் மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து வடசென்னை மக்களவைத் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியவை கொடுங்கையூர் குப்பை கிடங்கு, பேருந்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக வேட்பாளர்களை தேர்வு செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிமுக தலைமையிலான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அளிப்பதே இந்த நாட்டாமையின் தீர்ப்பு என்றும் கூறினார் சரத்குமார். ஆகையால் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar campaign in vadachennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->