திமுக கூட்டணி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த சரத்குமார்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 17 மக்களவைத் தேர்தலுக்கான தேதி அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, நாடு முழுதும் வரும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தை பொருத்தவரை, மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்  18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட காட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இதேபோல், வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்னியூஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், திமுக கூட்டணி ஒரு முரண்பாடான கூட்டணி என்ற ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்ததாவது, ''தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை. லட்சகணக்கான ஈழதத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தும், அதற்கு ஒத்துழைத்தது. இதனை திமுகவின் தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எப்படி தமிழக மக்களுக்கான ஒரு கூட்டணியாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SARATH KUMAR OPEN TALK ABOUT DMK ALLIANCE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->