சந்திரசேகராவின் 3 வது அணி திட்டத்தில் புதிய மாற்றம்!! இணையப்போகும் புதிய கட்சிகள்!!  - Seithipunal
Seithipunal


மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தியாளர் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில், "அந்தந்த மாநிலத்தின் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டாட்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அடுத்ததாக எங்களது கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் , ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேச இருக்கின்றார்.

Image result for congress seithipunal

அடுத்து கூட்டாட்சி முன்னணி தான் ஆட்சியை பிடிக்கும். ஒருவேளை எங்களுக்கு எம்பிகள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம் எங்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் கட்சி ஆதரவு மட்டும் தான் அளிக்கும்.

எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு இருக்காது. காங்கிரசுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களது ஆட்சியின் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள் தான் இருக்கும். எந்த கட்சி ஆதரவு கொடுத்தாலும் மாநில கட்சிகளில் உள்ள யாராவது ஒருவர் தான் பதவியில் இருப்பார்." என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandhirasekar rav may joint with congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->