தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்! தமிழக பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரில் கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் "சமன்வய பைட்டக்" என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உட்பட சங்பரிவார் அமைப்புகளின் இரண்டு நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னியராஜன், செயலர் ராஜேந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா "ஒவ்வொரு அமைப்பும் தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் என்ற தாய் இயக்கத்தின் விருப்பம். சில அமைப்புகள் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன. இயக்கங்கள் வளர்ந்தாலும் மாநிலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. தமிழகத்தில் அரசியல் அதிகாரம் பெற அனைத்து அமைப்புகளும் உதவ வேண்டும்" என பேசி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேசவிநாயகம், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை மன்மோகன் வைத்யா தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனிமனித ஒழுக்கம் சார்ந்த வெளிவரும் செய்திகள் தனி மனிதர்களை மட்டுமல்ல இயக்கத்தையும் பாதிக்கும். இதில் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. திமுகவின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது" என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS warned TNBJP Personal morals are very important


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->