முன்னாள் அதிமுக MP கே.சி.பழனிச்சாமி கைது செய்தது இதற்குத்தானாம்.? வெளியானது காரணம்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென வரத்து வீட்டில் கைது செய்யப்பட்டார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நான்கு மணிக்கு சூலூரை காவல் நிலையத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவையில் உள்ள அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் கே.சி.பழனிச்சாமியை கைது செய்த காவல்துறையினர், சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் அதிமுதவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, தான் அதிமுகவில் தற்போது அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறி, அதிமுகவின் முன்னணி  தலைவர்கள் பலரை விமர்சித்து பேசியதாக சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான கந்தவேல் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கே.சி.பழனிச்சாமி நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார் என்பதும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for admk ex mp kc.palanisamy arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->