அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா..?? முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மழுப்பல்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்தித்த முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிமுக பாஜக கூட்டணி குறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "தேர்தல் கூட்டணியில் வியூகத்திற்கு என்றும் இடமில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதேபோல் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். அதன் அடிப்படையில் தான் இதுவரை தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது.

இந்த நிமிடம் வரை அந்த நிலையில் தான் அதிமுக உள்ளது. கூட்டணி என்பது இருவர் மட்டுமே பேசும் விஷயம். அதில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் யாருக்கும் தெரியாது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் தான் அதிமுக இருக்கிறது. அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தங்களது இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றியுள்ளது. 

இதன் மூலம் தேர்தல் ஆணையமே இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்துள்ளது. ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மோடி பழனிச்சாமியை அழைத்ததன் வாயிலாக அவரும் அங்கீகரித்து விட்டார். அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பேசுகின்றனர். அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. கூட்டணியில் முதல் இடம் இரண்டாம் இடம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்" என அதிமுக பாஜக கூட்டணி குறித்து மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RB Udayakumar answered about ADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->