ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் முக்கிய பொறுப்புகள்!! ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வேலூரை தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்றது. கடந்த மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளில் திமுக தலைமையிலான கூட்டணி தேனி தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மத்தியில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், திமுக தலைமையில் மக்களவை மன்றத்தில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்து ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மு க ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார். அதில், மக்களவை குழு தலைவராக டிஆர் பாலுவும், கொரடாவாக ராசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மக்களவை குழு உயிரும் குழுவின் துணைத் தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தொகுதியில் 6 முறையும், மாநிலங்களவை தொகுதியில் ஒரு முறையும் தேர்வானவர் டிஆர் பாலு. தற்போது, இவர் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநிலங்களவை குழுத் தலைவராக சிவாவும், கொறடாவாக டிகேஎஸ், இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rasa and kanimozhi in main post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->