அதிமுக, திமுகவினர் இடையே மோதல்! பதற்றம் - பாதுகாப்பு பணியில் போலீசார்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், குக்குண்டி கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த மீரா என்பவரும், துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சரஸ்வதி என்பவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இருவரும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், ஊராட்சி நிர்வாகத்தில் இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிராம துணைத் தலைவரின் (திமுக) ஆதரவாளர் ஒருவர், ஊராட்சி மன்ற தலைவர் மீராவை (அதிமுக) தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை எடுத்து சம்பவத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். மேலும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலசார் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipet kukkundi ADMK DMK Clash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->