மோடி விடுத்த வேண்டுகோளுக்கு., வரவேற்பு தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க காலநிலை அவசரநிலையை அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் சார்பில் செப்டம்பர் 23 முதல் 29 வரை சென்னை பெருநகரம் முழுவதும் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடைபெறும் என மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன் படி இப்பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பாமக தலைவர் கோ.க. மணி, முன்னாள் சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், நேற்று நியூயார்க் நகரில் புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுப்பதற்கான ஐநா சிறப்பு மாநாடு நடைபெற்றது இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புவிவெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்றும் இதை உலக அளவில் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என பேசியிருந்தார்.

இதையடுத்து, ஐ.நா புவிவெப்பமயமாதல் சிறப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பேசியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், புவிவெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும்; இதை உலக அளவில் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா புவிவெப்பமயமாதல் சிறப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது எண்ணத்தை செயல்படுத்த காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அந்த பதிவில் பதிவிட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramdoss wellcomes modi announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->