ஒற்றை புள்ளியில் இணைந்த ராமதாஸ், திருமாவளவன்!! மிகப்பெரிய போராட்டம் நடக்கும் எனவும் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ள அஞ்சலக உதவியாளர், தபால்காரர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை இதுவரை நிரப்பி வந்தது. 

தபால் நிலைய  பணியிடங்களில் சேருவதற்கான தேர்வு எழுதும் முறையில் புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை தற்போது அகொண்டுவந்துள்ளது. அதன்படி, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய எழுத்து தேர்வில், விருப்ப மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், முதன்மைப் பணியிடங்க்கான, முதல் தாள் தேர்வை ஆங்கிலம், இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது இந்த முதல் தாள் தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்களில் மாநில மொழியை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிற பணி இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் இந்திய தபால் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மத்தியரசின் இந்த அறிவிப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதிவது;-

அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில்  திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் 

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழில் நடத்தவேண்டும், இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் திருமாவளவானும் எச்சரிதுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss condemned to post office requirement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->