ஒற்றை புள்ளியில் இணைந்த ராமதாஸ், ஸ்டாலின்!!  - Seithipunal
Seithipunal


தற்போது வரை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வந்தன இந்தநிலையில் இனி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடா, அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது 

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது.  அதேநேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்த அவர் மேலும் உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம் என வலியுறுத்தினார் 

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்ததிமுக தலைவர் ஸ்டாலினும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் என்பதை திமுக வரவேற்கிறது எனவும் செம்மொழியாம் தமிழ்மொழி உச்சநீதிமன்ற பட்டியலில் இல்லாதது வருத்தமளிக்கிறது என தெரிவித்த அவர் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadass and stalin speak about high court judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->