அதிக இடங்களை கைப்பற்ற போகும் பாஜக.? மாநிலங்களவை தேர்தலில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.! - Seithipunal
Seithipunal


18 மாநிலங்களவை எம்.பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. ஆகையால் 18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன்.19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

19ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ராஜ்ய சபாவில் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். 

மக்களவையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்தது. மக்களவையில் பெரும்பான்மை இருந்தாலும்,  மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் சில மசோதாக்களை மோடி அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது. 

மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 அதில், பாஜகவுக்கு 75 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்து 88 மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். எந்த தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajya sabha election in bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->