நடக்க போகும் முக்கிய தேர்தல்! திமுகவின் ஆதரவு யாருக்கு! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே மாநிலங்களவை துணை தலைவர் பதவி வகித்து வரும், ஐக்கிய ஜனதாதள எம் பி ஹரிவன்ஷ் நாராயன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் 14ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என ராஜ்யசபா செயலர் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 11ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிகள் ஒரே அணியாக செயல்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பொதுவேட்பாளரை நிறுத்த தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய மாநிலங்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 123 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 117 ஆக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 60 ஆக உள்ளது. திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் பலம் 67 ஆகவும் உள்ளது. 

எனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் குலாம் நபி ஆசாத் பேச்சுவார்த்தை நடத்து உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajya saba deputy speaker election some political issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->