இனியும் இந்தியாவை சீண்டினால் இது தான் கதி! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இந்தியா மீது போர்தொடுக்கும் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாட்னாவில் நடந்த கட்சி பொதுகூட்டத்தில் பேசிய அவர், இதுவரையில் பாகிஸ்தான் 1971ம் ஆண்டிலும் அதன் முன்பு 1965ம் ஆண்டிலும் என இந்தியாவுடன் பாகிஸ்தான் இரண்டு போர்களை நடத்தியுள்ளது. அப்படி மீண்டும் பாகிஸ்தான் போர் தொடுக்க நினைத்தால் அந்த நாட்டின் கைவசம் இருக்கும் ஆக்ரமிக்கப்பு காஷ்மீர் பகுதி என்ன ஆகும் என்பதை அந்த நாடு யோசித்து பார்க்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.

ஆக்ரமிக்கப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர். மேலும்,
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க எல்லைதாண்டிய திவீரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது, இன்னும் எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்புகிறது என பார்ப்போம். 

இனிமேல் இந்தியா எல்லைக்குள் நுழையும் ஒரு பயங்கரவாதிகூட உயிருடன் திரும்பிப்போகவே முடியாது. அந்த அளவுக்கு நம் நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh warning pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->