மரண படுக்கை! எனது இறுதி ஆசை! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட உருக்கமான ஆடியோ!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பல ஆண்டுகளாக சந்தேகம் எழுந்து வந்து கொண்டிருந்த நிலையில், ரஜினியின் ரசிகர்கள் "தலைவா வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போது" என்பது போன்ற சுவரொட்டிகளை தொடர்ந்து ஒட்டி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் இது போன்ற சுவரொட்டிகளை யாரும் ஒட்ட வேண்டாம் என, ரஜினி தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் அவரை வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரண படுக்கையில் ரஜினியின் உயிர் ரசிகர் ஒருவர் தனது இறுதி ஆசை என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், "ரஜினிகாந்த் தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் ரூபாய் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்." என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகருக்கு, நடிகர் ரஜனிகாந்த் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், அந்த ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்திய ரஜினிகாந்த். நீ விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini release audio for fan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->