கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் ரஜினி.! முதல்வர் வேட்பாளர் இவர்தான்.? - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

ரஜினி கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து ரஜினி தேர்தலை சந்திப்பர் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரண்டாவது முறையாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி அழைத்துள்ளார். இன்று காலை அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது முதல்வர் வேட்பாளரை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனைக்கு பிறகு ரஜினி  11.00 மணி அளவில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது தனது அரசியல் திட்டம், எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறுவார் என்றும், கட்சி பெயரை அறிமுகம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளராக கர்நாடக  அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ்-சை அறிவிக்கப்போவதாவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini press meet for 11 am


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->