முக்கிய நபரை சந்தித்த ரஜினி! வெளியான பிரமாண்ட மாநாடு குறித்த அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி தனி கட்சி தொடங்கபோவாதாகவும், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தெரிவித்து இருந்தார். 

விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருந்தார். 

சென்ற 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று தனது ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது அவர் கூறியதாவது, எனக்கு பணம் புகழ் எதுவும் வேண்டாம். நான் நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை எல்லாம் நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என தெரிவித்த அவர். 1996 ஆம் ஆண்டு 45 வயதில் என்னை தேடி பதவிகள் வந்தது ஆனால் அந்த பதவிகளை நான் ஏற்க மறுத்துவிட்டான். அப்படி 45 வயதிலேயே அரசியல்  பதவிக்காக ஆசைப்படாத நான் 65 வயதிலா ஆசைப்படப் போகிறேன் என பேசியிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற பொங்கல் தினத்தன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளன. 

அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என போட்டி என்று கூறியிருந்த ரஜினிகாந்த், 2020 ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini party planing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->