பிரபல கட்சியுடன் இணையும் ரஜினி? முதல்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை கமலும், ரஜினியும் இணைந்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தது. குறைந்த வாக்குகள் பெற்று அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது. 

கமலுக்கு முன்பு இருந்தே ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பதாக கூறிவருகிறார். இன்னும் ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ரஜினி மற்றும் கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல் மற்றும் ரஜினி இணைய, இயக்குனர் சந்திரசேகரன் விருப்பம் தெரிவித்த நிலையில் விஜயும் அவருடன் கை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini may be join mnm party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->