#BigBreaking: நடிகர் ரஜினியை சற்றுமுன் சந்தித்த கமல்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் சந்திப்பு நடத்தி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி திமுக தலைமையில் ஒரு கூட்டணி போட்டியிடும்.

அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடும் என்றும், இல்லை மூன்றாவது ஒரு கூட்டணியை இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி கூட்டணியை உருவாக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். பின்னர் தன் உடல்நிலை உடல் நிலையை கருத்தில் கொண்டு தற்போது அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு கேட்பதாக இந்த சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற சந்தேகம் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் சந்தித்திருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini kamal meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->