உள்ளாட்சி தேர்தல் ஆதரவு..திமுகவிற்கா.?! அதிமுகவிற்கா.?! ரசிகர்களை எச்சரித்த ரஜினி.!  - Seithipunal
Seithipunal


நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் ரஜினிகாந்த் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது ரஜினி மேடையில் பேசும் போது, ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என்று ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனை கண்ட அரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் சுவாரஸ்யமாக கைதட்டி ஆர்ப்பரித்தனர். 
 
இந்த நிலையில், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மன்றம் சார்பில் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது. 

அந்த அறிக்கையில், மன்றத்தின் பெயர் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது. மேலும், ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட  ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJINI EXPLAIN ABOUT LOCAL BODY ELECTION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->