வைகோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு., கவலை தெரிவித்த அதிமுக அமைச்சர்!! - Seithipunal
Seithipunal


கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்தநிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிகள் 10 ஆயிரம் அபராதமும் ஒரு வருட சிறை தண்டனையும் அளித்து சிறப்பு நீதிமன்றம் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். மேலும் வைகோவை ஒரு மாத காலத்திற்கு கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அரசுப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அங்கு பயிலும் மாணவ மணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் வைகோவின் கைது குறித்து கேட்டார் அதற்கு கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி. தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்த அவர் இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendrabalaji says about vaiko


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->