மோடிக்கு ஆதரவாக பேசி வந்த அமைச்சர் திடீர் பல்டி..ஒரே பேட்டியில் மொத்தமும் கிளோஸ்; பாஜகவினர் கடும் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் அதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் கல்வியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதம் வந்ததா? என நேற்று மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பியின் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்து பேசியதாவது, புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழி கொள்கையே இந்தியா முழுவதும் பின்பற்றப்படும். மூன்றாவது மொழியை தேர்வு செய்வது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் அதில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் எனவும் எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையே தொடரும் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மும்மொழி, இருமொழி கொள்கை காரணமாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மும்மொழி கொள்கையால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பினார். 

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, அமைச்சர், கூட்டணியை விட்டுத் தரலாம் ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது என அதிரடியாக கூறினார். மேலும் கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போன்றது என்றும் கொள்கை என்பது நாம் கட்டும் வேட்டி போன்றது எனக் கூறிய அமைச்சர், அதிமுக பொங்கும் கடல் போன்றது, அதனை எக்காலமும் அழிக்க முடியாது என தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது பாஜகவுக்கு எதிராக பேசுவதும் பாஜக கூட்டணி அதிமுகவிற்கு தேவையில்லை என்ற விதத்தில் பேசி இருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendira balaji speech against to bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->