மாடல், மாடல் ஆட்சிகள் - இது காங்கிரஸ் மாடல் ஆட்சி! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் ஆளக்கூடிய ராஜஸ்தான் மாநிலத்தில், புதிதாக போடப்பட்ட சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளான புகைப்படம், சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது மாடல் மாடலாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் ரயில் நிலையம் அருகே புதிதாக சாலை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சாலை வழியாக இன்று காலை ஒரு லாரியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சென்றவர் நிலை தடுமாறி அந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டார். இதில், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்ட போதிலும், உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர், சாலையில் ஏற்பட்ட அந்த பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும் அந்த சலை வழியாக வானங்கள் அனைத்தும் மாற்றுப் பாதைகள் திறப்பு விடப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டில் மாடல் மாடலாக நடக்கும் ஆட்சிகள் செய்யும் தவறுகளை அவ்வப்போது இதுதான் உங்க ஆட்சி மாடலா? என்று சுட்டிக் காட்டும் வகையில், தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியின் மாடலா இது? என்று இந்த விபத்து புகைப்படத்தை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan road accident viral pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->