கட்சி மாறி வாக்கு.. பாஜக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் 4 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா, கட்சியின் உத்தரவை மீறி காங்கிரஸ் உறுப்பினரை ஆதரித்து வாக்கு அளித்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அன்றைய தினமே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இடைநீக்கம் செய்யப்பட்டார். நோட்டீஸில் 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரப்பட்டிருந்தது. 

ஆனால் அதற்குள் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜகவின் மத்திய ஒழுங்கு குழு அறிவித்துள்ளது. பாஜகவின் ஒழுங்கு குழுவின் செயலாளர்  ஓம் பதக் இது குறித்து அனுப்பியுள்ள அறிக்கையில், நீங்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்,  இதர அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan bjp mla suspend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->