அதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்! போர்கொடி தூக்கிய எம்.எல்.ஏ?! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ், இ.பி .எஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை சந்தித்தது . 

இந்நிலையில், அதிமுகவின் மதுரை வடக்கு தொகுதி எம்.ல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை இன்று சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என அறியமுடியவில்லை, மேலும்  ஓ.பி.ஸ் மற்றும் இ.பி .ஸ் அணிகள் இன்னும் முழுவதும் இணையவில்லை, கட்சி தலைமை யார் என்றே தெரிவதில்லை. மேலும் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் பொதுச்செயலாளரை தேர்தெடுக்க வேண்டும், தினகரன் என்ற மாயை தற்போது இல்லை என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் 

எவ்வளவு உட்கட்சி பூசல் இருந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்ல மாட்டோம் என்றும், சுயநலம் சிறிதும் இல்லாத மக்கள் பணியாற்றக்கூடிய தலைமை வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி என இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

English Summary

rajan sellappa press meet


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal