#BREAKING | மிக முக்கிய பிரச்சனை முடிவுக்கு வருகிறது.! சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை.! - Seithipunal
Seithipunal


ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரியைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசுடைமையாக்கப்பட்ட பின்னரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டணத்தை விட சுமார் 30 மடங்கு அதிகமாக மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதுதாக புகார்கள் எழுந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, மாணவர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரியைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

 

இதற்கிடையே, கூடுதல் கல்விக் கட்டணத்தை கண்டித்து, மாணவர்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசனை பிறப்பித்துள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதன் மூலம், இனி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக இயங்கும். மேலும், அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajah Muthiah Medical College ended


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->