இது கருப்பு தினம்! கொந்தளிக்கும் ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இன்று கூடியிருக்கும் மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவிற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மசோதா நகலைக் கிழித்து எறிந்தார். சபாநாயகர் இருக்கை அருகே வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மசோதா நகலைக் கிழித்து எறிந்தார். வேளாண் அமைச்சரை பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் இட்டு வருகின்றனர். மேலும், அவையில் உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயத்திற்கு எதிரான கருப்பு சட்டம் என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்வீட்டர் பக்கத்தில், புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமையாக்கப்படுவர். புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயத்திற்கு எதிரான கருப்பு சட்டம் என ராகுல்காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul tweet about agri bills


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->