மோடியை கைது செய்யுங்கள்.! அரசியல் அமைப்பின் ஆணிவேரை கையில் பிடித்த ராகுல் காந்தி.!! சிக்கியதா ஆதாரம்.!!! - Seithipunal
Seithipunal


ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில், ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு மோடி உதவுவதாக கூறிய காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டைம் அனில் அம்பானி மறுத்து உள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் தெரியாதபோது, அணில் அம்பானிக்கு 10 நாட்களுக்கு மென்பே எப்படி தெரிந்தது. எனவே, ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்ய வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில், ''ரஃபேல் போர் விமானம் குறித்து இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும் முன்பே, தொழிலதிபர் அனில் அம்பானி 10 நாட்களுக்கு முன்பே பிரான்ஸ் சென்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். அவருக்கு இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து இருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர், எச்ஏஎல், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு தெரியும் முன்னதாகவும், இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் 10 நாட்களுக்கு முன்னதாகவும், எப்படி அனில் அம்பானிக்கு தெரியவந்தது?  மேலும் இது தொடர்பாக ஏர்பஸ் அதிகாரி, பிரான்ஸ் அதிகாரிக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகசிய காப்புச் சட்டத்தை பிரதமர் மோடி மீறியுள்ளது உண்மையாகும். அவரை ரசகிய காப்புச் சட்டத்தை மீறிய வகையில் கைது செய்ய முடியும்'' என்று அந்த பேட்டியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul press meet in delhi about rafali


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->