கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்., அப்படிதான் நல்லா கேளுங்க., கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும், தேசத்துரோக சட்டம் தேவைதானா? என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார்.

தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தேவைப்படுகிறதா? என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

தேசத்துரோக சட்டம் 124 ஏ பிரிவு, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது, எனவே, தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தேவைப்படுகிறதா? என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தேச துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மரத்தை அறுக்க ரம்பத்தை தச்சர் இடம் அளித்தால், ஒட்டுமொத்த காட்டை அழிப்பது போல் உள்ளது என்றும், பல இடங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த சட்டத்தை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி கேள்விகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துகளை வரவேற்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi warm welcome to supreme court questions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->