ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி குற்றச்சாட்டு – “உச்ச நீதி மன்றம் அனுமதித்தும், சி.பி.ஐ. இயக்குநரை, மோடி ஏன் நீக்கினார்”? - Seithipunal
Seithipunal


 

சி.பி.ஐ. இயக்குநர் அலேக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோர், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச் சாட்டுகளைச் சுமத்தினர். இதனால், இவர்களை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தது.

இதனை எதிர்த்து, அலேக் வர்மா, உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, உச்ச நீதி மன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனால், அலேக் வர்மா, சி்.பி.ஐ. இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்றார். ஆனால், மத்திய அரசு, உடனடியாக அவரது பதவியைப் பறித்தது. இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப் பட்டுள்ளார்.

இது பற்றி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “சி.பி.ஐ. இயக்குநரை, பிரதமர் மோடி அவசரமாக பதவி விலக்கியது ஏன்? நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் முன், சி.பி.ஐ. இயக்குநரை அனுமதிக்காதது ஏன்? இதற்கும் ரபேல் ஒப்பந்த விவகாரம் தான் காரணமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi again questioned to Modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->