காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை., ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ராகுல்காந்தி தகவல்!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவுடனும், பத்திர்கையாளர்களுடனும் ஸ்ரீநகருக்கு ராகுல்காந்தி விமானம் மூலம் நேற்று சென்றார். ஆனால் எதிர்க்கட்சி குழுவினருடன் சென்ற ராகுல்காந்தியை விமான நிலையத்தை விட்டு வெளியேற ஜம்மு காஷ்மீர் அரசு அனுமதிக்கவில்லை. இதனால் ராகுல்காந்தியும் எதிர் கட்சி குழுவினரும் மீண்டும் டெல்லி திரும்பினர். 

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை  சந்தித்த ராகுல்காந்தி பேசுகையில், மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியவே தாம் ஸ்ரீநகருக்கு சென்றதாக தெரிவித்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீர் ஆளுநர், காஷ்மீருக்கு வருமாறு எனக்கு அழைப்புவிடுத்ததாக தெரிவித்த ராகுல் காந்தி. காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றார் .

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் அங்கு எல்லாம் இயல்பாக இருக்கும்பட்சத்தில் ஏன் எங்களை அனுமதிக்கவில்லை என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul says about kashmir


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->