ராகுல் காந்திக்கே இந்த நிலமையா? கலக்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இதுவரை 399க்கும் அதிகாமான தொகுதிகளின் முன்னணி நிலவரங்கள்  தெரியவந்துள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 308 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி 115 இடங்களிலும், இதர கட்சிகள் 87 தொகுதிகளிலும் முன்னணி பெற்றுள்ளன.

அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்தது. தற்போது வரக்கூடிய தற்போதைய  நிலவரங்களில் பாஜகவின் கையே மேலோங்கியுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க வகையில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னவடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்றுள்ளார். இதே போல ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னிலை நிலவரங்கள் வரத்தொடங்கியதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ள அதே நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul recession in consistency


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->