தலித்., நாங்க போட்ட பிச்சை.! PCR கேசில் திமுக எம்.பி., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில், நாங்கள் உங்களுக்கு போட்ட பிச்சை என்று திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி போலீசாரால் கைதும் செய்யப்பட்டார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ் பாரதி, தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தலித் மக்களை அவமானம் செய்யும் விதமாக பேசினார்.

இதனையடுத்து அவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

(குறிப்பு: தலித் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு என்று மார்தட்டும் விடுதலை சிறுத்தைகளை கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால், தோழமை சுட்டுதலுடன் நிறுத்தி கொண்டு கூட்டணி தர்மத்தை காப்பாற்றியது. காப்பாற்றியும் வருகிறது.)

இதனையடுத்து, கடந்த வருடம் மே 23 ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி மனு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதி மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து மனு மீதான விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

#HighCourt | #RSBharathi


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R S BHARATHI PCR CASE ISSUE FEB 15


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->