ஆணைய வக்கீலின் குறிப்பிட்ட கேள்விக்கு, பதில் அளிக்க இயலாமல் திணறிய அப்பல்லோ மருத்துவர்….! - Seithipunal
Seithipunal


 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, அப்பல்லோ மருத்துவர் பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு,  விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி, அவர் ஆஜரானார். அப்போது அவர் அளித்த மருத்துவ அறிக்கையில்,   2016 டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு, ஜெயலலிதாவிற்கு ரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியேற்றும் சக்தி 60 சதவீதம் இருந்தது. இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. மிகச் சிறப்பாக இருந்தது, என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதைச் சுட்டிக் காட்டிய ஆணைய வக்கீல், “ டிசம்பர் 4-               ஆம் தேதி  மாலை 4.20 மணிக்கு, ஜெயலலிதாவிற்கு இதய அடைப்பு ஏற்பட்டுள்ளது, என அப்பல்லோ மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதயம் செயல் இழந்த பின், ரத்தத்தை வெளியேற்றும் சக்தி எப்படி 60 சதவீதம் இருக்க முடியும்”? என, பிரகாஷ் ஜெயினிடம் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க இயலாமல், பிரகாஷ் ஜெயின் திணறினார், என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்படி அறிக்கை தர, யார் அவருக்கு அழுத்தம் தந்தார்கள்? என்ற விபரத்தையும், ஆராய, விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

question to the appollo doctor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->