தமிழக முதல்வர் போட்ட சட்டம்! போராட்டத்தில் குதித்த அதிமுக எம்.எல்.,க்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா கொண்டு வந்து அதனை நிறைவேற்றியுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் தமிழ் முதல்வரின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்தது போல புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் மற்றும்  அசனா  ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட காலத்துக்கு அந்நேரம் வந்த புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரியிலும் உள் ஒதுக்கீடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery admk mla protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->