#Breaking : 'சத்திரியர் பேரின சரித்திரத்தில் பெரும் தலைவர்' மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு., சற்றுமுன் இரண்டு பாடல்களை பாடி வாழ்த்திய புஷ்பவனம் குப்புசாமி.! - Seithipunal
Seithipunal


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளதால் வன்னிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த இந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவருமான மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்து, இன்று (31.07.2021 சனிக்கிழமை) பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவர் இராமதாஸ் அவர்களை வாழ்த்திய திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள், 

"நவநீதம் சஞ்சீவீராயர் பெற்றெடுத்த அரும்புதல்வர், 
சத்திரியர் பேரின சரித்திரத்தில் பெரும் தலைவர்.. 
மருத்துவர் அய்யா., எங்கள் மருத்துவர் அய்யா., 
வன்னியர் குலத்தின் வாழ்வினை நன்கு மாற்றினார் அய்யா..

தமிழினம் நிமிர வேண்டும், 
தமிழகம் வளர வேண்டும், 
சமூக நீதி இங்கே சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்று, 
உழைப்பவர் மருத்துவர் அய்யா.. 
என்றும் உழைப்பவர் எங்கள் மருத்துவர் ஐயா.. 
இந்திய தலைவர்களில் யாரும் இவர்போல் உண்டோ...

படித்து பார்வை பெற, பணியாற்றும் வாய்ப்பு பெற, 
பாட்டாளி பிள்ளைகள் படிப்படியா ஏறி வர.. 
அழுதவர் எங்கள் அய்யா.. அழுத்தம் தந்தவர் எங்கள் அய்யா. 
அடிமை தமிழ் மனதை உளுத்தவர் எங்கள் அய்யா...

கல்லடியும் சொல்லடியும் காவலரின் தடியடியும், 
பாழடைந்த சிறையில் பழைய சோற்றில் புழு நெளியும், 
வழக்கு வாய்தா என்றே வாழ்ந்தார் ஐயா.. 
எங்கள் கிழக்கை விடிய வைத்து உயர்ந்தார் அய்யா.. 

முதுமை என்னை வாட்டும் போதும், 
கோலூன்றி நடக்கும் போதும், 
இந்த ஊமை ஜனங்களுக்குமாய் உழைப்பேன் என்றீரே., 
பாட்டாளி தமிழர் எல்லாம் படை திரண்டு நன்றி சொல்ல., 
பாட்டாளி சொந்தம் எல்லாம் பாதையெங்கும் மலர்கள் தூவ.. 

வாருங்கள் அய்யா., 
எங்களை பாருங்கள் அய்யா., 
வாழ்த்துங்கள் அய்யா., 
நீங்கள் வாழ்த்துங்கள் அய்யா.. 
நீங்கள் வாழுங்கள் அய்யா.. பல்லாண்டு பல்லாண்டு இந்த ஊமை ஜனங்களுக்காக வாழுங்கள் அய்யா.. 
எங்களை வாழவைக்க வேண்டும் அய்யா.., எங்களை வாழவைக்க வேண்டும் அய்யா.. நன்றி அய்யா"  என்று இராமதாஸ் அவர்களை வாழ்த்தி பாடல் ஒன்றையும் பாடினார்.

மேலும், 
இதனைப்போன்று, நீங்கள் இன்றி நாங்கள் இல்லை அய்யா., 
உமக்கு நிகரென்று எவரும் இல்லை அய்யா., 
போராடும் பிறந்த தலைவர் நீங்கள், 
உங்களை பின்பற்றும் படைகள் வீரர் நாங்கள்., 
மருத்துவர் அய்யா வாழ்க. உங்கள் மானுட பேரன்பு வாழ்க... 
அடையாளம் அற்றுப்போய் கிடந்தோம் " என்ற மற்றொரு பாடலும் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடினார்.

இந்த பாடலை மெய் சிலிர்த்து பாட்டாளிகள் கேட்க, மருத்துவர் அன்புமணி இராமதாசும் உடனடியாக புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushppavanam kuppuswami wish to Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->