எந்த கட்சிக்கு செல்கிறேன்? நிலைப்பாட்டை அறிவித்தார் பெங்களூர் புகழேந்தி!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த தினகரன், தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே ஒருவர் ஒருவராக வெளியேறி வரும் நிலையில், தற்போது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் பெங்களூரு புகழேந்தியும் கட்சியிலிருந்து வெளியேறுவார் என தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. 

அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களை கோவையில் சந்தித்து பேசினார் பெங்களூர் புகழேந்தி. அப்போது நீக்கப்பட்டவர்களிடம் பேசியதை வீடியோவாக  அமமுக சமூக ஊடக பிரிவு வெளியிட்டு உள்ளது. 

இந்தநிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, தற்போதைக்கு வேறு எந்த கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போதுக்கு இல்லை. அமமுகவை விட்டு தினகரன் என்னை போ என்றால் சசிகலா என்னை வா என்பார். நான் கட்சியில் இருக்க வேண்டுமா என்பதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும், சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் நிலைமை மாறும். இதெற்கெல்லாம் விடை கிடைக்கும். தற்போதைக்கு தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. அமமுகவில் இருக்கும் கொஞ்சம்பேரையும் இழந்துவிடக்கூடாது.

கோவையில் நான் பேசியது உண்மைதான் அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு உள்ளது. அமமுகவின்  தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் தான் எனக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணை குத்தி உள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pugazhenthi announced his stand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->