கூடுதல் நெல் கொள் முதல் நிலைங்கள் அமைக்ககோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


கூடுதல் நெல் கொள்முதல் திறக்க கோரி விவசாயிகள் டிராக்டர்கள் கொண்டு சாலை மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. காரையூர் அருகே சடையம்பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அங்குள்ள 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். 

இந்நிலையில் காரையூர் நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களாக திறக்கபடவில்லை. இதனால் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களில் அறுவடை செய்த நெல்மூட்டைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாண்டிஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். 

சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இந்த ஒரே ஒரு நெல்கொள்முதல் நிலையம்தான் அதனால், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Farmers Protest about make extra Paddy Goods down Storage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->