சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர்?! முதல்வர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் அவர் வகித்து வந்த சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து சபாநாயகர் காலியாக உள்ளதாக அறிவித்து. சபாநாயகர் பதவிக்கான தேர்தலை அறிவித்தது . 

தேர்தல் அறிவித்த புதுச்சேரி அரசு இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் சபாநாயகர்  வேட்பாளரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏக்கள்  கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பாக தற்போதைய துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அவர் சார்பாக 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே, கால அவகாசம் தராததால் சபாநாயகர் தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்கட்சிகள் அறித்துள்ளன. எனவே, சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry new legislative speaker elected


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->