முதல்வர் வேட்பாளர் தொகுதியில்., வேட்பாளரை காணவில்லை., காவல்நிலையத்தில் மனைவி பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


நாளை தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் நிறைவு பெற்றது.

இன்று தேர்தல் சம்பந்தமான பிரச்சாரங்களில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஏனாம் சட்டமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனாம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக துர்கா பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக துர்கா பிரகாஷ் காணவில்லை என்று அவரது மனைவி ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற தனது கணவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த விவகாரம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ரங்கசாமியின் தொகுதியில், சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry independent candidate missing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->