அதிமுகவிற்கு ஆதரவு இல்லை! அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்!  - Seithipunal
Seithipunal


விரைவில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். 

கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி, தென்காசி தொகுதியில் போட்டியிட்டது. அப்போது பட்டியல் பிரிவில் உள்ள 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வெளாளர் என்று அரசாணை வெளியிட ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

ஆனால் அதன்பிறகு இந்த குழுவின் செயல்பாட்டில்முன்னேற்றமும் இல்லை என்பதால், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்காமல் இருந்தது. 

இன்று நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது புதிய தமிழகம் கட்சியின் கொடியும் கூட்டத்தில் இருந்தது. இதனால், புதிய தமிழகம் கட்சியினர், அதிமுகவினர் இடையே வாக்குவாதம் உண்டானது. 

இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எண்களின் கோரிக்கையை நிறைவேற்றததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பினால் விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வித பின்னடைவும் இல்லை. அதே சமயம் நாங்குநேரி தொகுதியில் சிறிய அளவிலான வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTK does not support admk in by poll


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->